தந்தை இல்லை! ஏழைத்தாயின் மகள் படைத்த மகத்தான சாதனை! நேரில் சந்திக்க காத்திருக்கும் மோடி!

ஆந்திர மாநிலத்தில் ஏழைத்தாயின் மகளுக்கு ஏழைத்தாயின் மகனான பிரதமர் மோடியுடன் அமர்ந்து சந்திராயன்-2 நிலவில் இறங்கும் காணொளியை காண்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் சந்திராயன்-2 தரையிரங்க இருப்பதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காணொளி மூலம் அதனை காண்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடியுடன் 60 மாணவ மாணவிகளுக்கு சந்திராயன்-2 நிலவில் இறங்குவதை காண்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி இந்தியாவில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு இஸ்ரோ சார்பில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தா தேஜஸ்வரி என்ற ஏழைத் தம்பதிக்கு மகளாக பிறந்த காஞ்சனா பாலா ஸ்ரீ வாசுகி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போக தாயார்தான் விதவைகளுக்கு அம்மாநிலத்தில் அளிக்கப்படும் 2,250 ரூபாய் உதவித்தொகை வைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அதன் மூலம் ஆந்திரா மாடல் பள்ளியில் படித்து வந்த வாசவி தனது ஆசிரியர் மற்றும் பெற்றோரின் துணையுடன் திறமையாக போட்டியில் விளையாடி வென்றுள்ளார்.

இதையடுத்து இஸ்ரோ சார்பில் அவருக்கு விமானத்தில் டிக்கெட் புக் செய்யபட்டது. ஆனால் விமானத்தில் வருவதைவிட ரயிலில் வரவே நான் விரும்புகிறேன் என்று அவர் கூற, ரயிலில் ஏசி பெட்டியில் அவருக்கு டிக்கெட் புக் செய்யப்பட்டது. இது குறித்து வாசவி கூறுகையில், இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இத்தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Times Tamil

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis