ஓணம் பண்டிகை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Spread the love

சென்னை: இன்று ஓணம் பண்டிகையையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியின் வருமாறு:

மக்கள் உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் ‘ஓணம் திருநாள்’ கொண்டாடும் கேரள மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறுவடைத் திருநாளான ‘ஓணம் திருநாள்’ கேரள மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுத் திருவிழா. சாதி மத பேதமின்றி கேரள மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடிடும் இந்த விழா, அனைவரின் வாழ்விலும் எல்லா விதமான இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் திருவிழா ஆகும்.

ஓணம் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற காரணத்திற்காக, கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, நாகர்கோவில், கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் வாழும் கேரள மக்களுக்கு ‘சிறப்பு அரசு விடுமுறை’ அளித்ததை இந்த நேரத்தில் நினைவூட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய ‘ஓணம் திருநாள்’ வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *