இனிப்பாக இருந்தால் பத்தாது தீபாவளி ஸ்வீட்! தரமாக தயாரிக்க அறிவுறுத்தல்!

கோவை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பகங்கள் தரமிக்க இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும் எனவும், வீடுகளில் வியாபாரத்துக்காக இனிப்பு தயாரிப்பவர்களும், தற்காலிக உரிமம் பெற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே, இனிப்பு, காரம் பலகாரம் செய்து சாப்பிட்ட காலம் இன்றில்லை. பலர் இனிப்பு வகைகளுக்கு, ‘ஸ்வீட் ஸ்டால்’களையே நம்பியுள்ளனர்.இந்நிலையில், தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, கோவை உணவு பாதுகாப்புத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:இனிப்பு தயாரிப்புக்கு, அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பணியில் இருப்பவர்கள் கையுறை, தலைகவசம், மேலங்கி அணிய வேண்டும்.இனிப்பு தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும். பணியின் போது ஊழியர்கள் குட்கா, பான்பராக், வெற்றிலை, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.தரமான எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை உபயோகிக்கக் கூடாது.உணவு பொருட்கள் அனைத்திலும், தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுதவிர, வீடுகளில் வியாபாரத்துக்காக இனிப்பு தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம், தற்காலிக அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து இனிப்பக உரிமையாளர்களின் கூட்டம், விரைவில் நடத்தப்படவுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis