அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: மு.க. ஸ்டாலின்

மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரே வழி உள்ளாட்சித் தேர்தல்தான். ஆனால் இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பேரவை இடைத்தேர்தலையொட்டி, இத்தொகுதிக்கு உள்பட்ட நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி ஆகிய இடங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திண்ணை பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்தோரிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த 3 கிராமங்களில் திரண்டிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:
குடிநீர், ரேஷன் கடை பிரச்னை, வேலைவாய்ப்பின்மை, சாலை, மருத்துவ வசதி இல்லாமை, முதியோர் உதவித் தொகை கிடைக்காதது, 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் சரியாக வழங்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டினீர்கள்.
இந்தப் பிரச்னைகள் தமிழகம் முழுவதும் இருக்கின்றன. இவற்றைத் தீர்க்க ஒரே வழி உள்ளாட்சித் தேர்தல்தான். ஆனால், இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காது.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளியில் கட்டாய பெண் ஆசிரியர்கள் நியமனம் என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தமிழகத்தில் திமுக சிறப்பாக செயல்படுத்தியது.
பெண்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும், சிறு தொழில் செய்யக் குறைந்த வட்டியில் மானியத்தோடு கடன் பெறுவதற்காக மகளிர் சுய உதவிக்குழு திட்டம் கொண்டு வரப்பட்டது. அவையெல்லாம் இப்போது சின்னாபின்னமாகிவிட்டன. ஆளும் கட்சியும், அமைச்சர்களும்தான் மக்கள் குறைகளைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்கு கேட்டு மட்டும்தான் வருவார்கள்.
பெண்களுக்கு இந்த ஆட்சியில் ஏராளமான கொடுமைகள் நடக்கின்றன. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இதையெல்லாம் நினைவில் வைத்து வரும் 21}ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், திமுக தேர்தல் பொறுப்பாளர் ஐ. பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், திமுக கிழக்கு மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன், அவைத் தலைவர் அப்பாவு, பாளையங்கோட்டை ஒன்றியச் செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணாபுரம் கடை வீதியில்...: கிருஷ்ணாபுரத்தில் திண்ணை பிரசாரத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் சிவந்திப்பட்டிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, கிருஷ்ணாபுரம் கடைவீதி, பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் நின்றதைப் பார்த்த அவர், வேனிலிருந்து இறங்கினார். கடைகடையாக சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின், பின்னர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள், பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis