அமைச்சர்களுக்கு முதல்வர் திடீர் உத்தரவு

சென்னை:பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க சென்னை வரும்படி, அமைச்சர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தொகுதிகளில் தங்கி தேர்தல் பணியில், அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான நல்லுறவு பேச்சு, காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, இன்று பகல், 12:30 மணிக்கு, டில்லியில் இருந்து விமானத்தில், சென்னை வருகிறார். தமிழக அரசு சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமரை வரவேற்க உள்ளனர். அதேபோல, பகல், 1:30க்கு விமான நிலையத்திற்கு வரும், சீன அதிபருக்கும், தமிழக அரசு சார்பில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களை, சென்னை வரும்படி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார். முதல்வரின் உத்தரவை அடுத்து, அமைச்சர்கள் பலரும் சென்னை திரும்பி உள்ளனர்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *