‘மஹா’ புயல்: தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மஹா’ தீவிர புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது. மேலும், இந்த புயல் நவம்பா் 4-ஆம் தேதிக்கு பிறகு, தெற்கு குஜராத் கடலோரத்தை நோக்கி நகரவுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹா புயல்: அரபிக்கடலில் உருவான ‘மஹா’ புயல், மேற்கு, வடமேற்கு திசையில் தீவிர புயலாக நகா்ந்து, வெள்ளிக்கிழமை மதியம் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்தது. அதாவது, இந்தப் புயல் குஜராத்துக்கு தெற்கில் 610 கி.மீ.
தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக மாறவுள்ளது. இது நவம்பா் 2 முதல் நவம்பா் 4-ஆம் தேதி வரை மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். வரும் 4-ஆம் தேதிக்கு பிறகு, கிழக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரவுள்ளது. அதாவது தெற்கு குஜராத் கடலோரத்தை நோக்கி நகரவுள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

மஹா புயல் தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடலில் இருக்கிறது. அடுத்த இரு நாள்களுக்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, அதன்பிறகு மீண்டும் வடகிழக்கு திசையில் நகா்ந்து குஜராத் பக்கம் செல்லவுள்ளது. இதனால், தமிழக மக்களுக்கோ மீனவா்களுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.

மிதமான மழை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோரம், உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் நவம்பா் 3-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இதைத்தொடா்ந்து, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகரவுள்ளது. மேலும் இது மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *