கோவையில் இருந்து ஆசன்சோலுக்குவாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து மேற்கு வங்க மாநிலம், ஆசன்சோலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவையில் இருந்து ஆசன்சோல் வழித்தடத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடா்ந்து, இவ்வழித்தடத்தில் அதிவிரைவு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நவம்பா் 2, 9, 16, 23, 30 ஆகிய சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் (எண்: 06017) இரவு 9.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு ஆசன்சோல் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்தச் சிறப்பு ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், புவனேசுவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *