கோவையில் சோகம்: வளர்ப்பு நாயை விடச் சொன்னதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

கோவையில் தனது வளர்ப்பு நாயை கைவிடச் சொன்ன காரணத்தால் கவிதா (23) என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கவிதா, கடந்த 2 வருடங்களாக சீஸர் என்ற பெயரிட்டு ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த நாய் தொடர்ந்து குறைப்பதால் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக அக்கம்பக்கத்தினர் கவிதாவின் பெற்றோரிடம் புகார் தெரிவிததுள்ளனர். இதனால் அந்த வேறு இடத்தில் கொண்டு விடும்படியும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினரை பகைத்துக்கொள்ள விரும்பாத கவிதாவின் பெற்றோரும் அதையே தனது மகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில, மனமுடைந்த கவிதா, தனது செல்ல நாயை காப்பாற்றி, நன்கு பராமரிக்குமாறு மரண வாக்குமூலம் எழுதிவிட்டு வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

One thought on “கோவையில் சோகம்: வளர்ப்பு நாயை விடச் சொன்னதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

  • December 6, 2019 at 8:42 pm
    Permalink

    495602 37483Hello, you used to write excellent, but the last few posts have been kinda boringK I miss your great writings. Past several posts are just a bit out of track! come on! 569903

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *