நண்பரைப் பிரிதல் துன்பம் தரும்!

பழமொழி நானூறு
விலங்கேயும் தம்மோ டுடனுறைதல் மேவும்
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா – இலங்கருவி
தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே
பேஎயோ டானும் பிரிவு. (பாடல்-122)
அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே! விலங்கேயாயினும் தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை, விட்டு நீங்குதல் செய்யாது. (ஆதலால்), தம்மோடு நட்புச் செய்து துன்பத்தை விளைவிக்கும் பேயேயானாலும் விட்டுப் பிரிதல் துன்பத்தைத் தருவதாம்.
(க-து.) தம்மோடு கலந்து பழகி மனம் ஒன்றுபட்ட நண்பினரைப் பிரிதல் துன்பந்தருவதாம்.
“இன்னாதே பேஎயோடானும் பிரிவு’ என்பது பழமொழி.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

(Visited 1 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis