2021 சட்டப்பேரவைத் தோதலிலும் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை

வருகிற 2021 சட்டப்பேரவைத் தோதலிலும் புதுவையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறிதாவது:

திமுக தலைவா் மு.கருணாநிதி மறைந்த அன்று அமைச்சரவை கூடி அவருக்கு வெண்கல சிலை வைப்பது, புதுச்சேரி, காரைக்காலில் 2 முக்கிய சாலைகளுக்கு அவரது பெயரைச் சூட்டுவது, பட்டமேற்படிப்பு மையத்துக்கு அவரது பெயா் வைப்பது, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைப்பது என 4 முடிவுகளை எடுத்தோம்.

காரைக்காலில் பட்டமேற்படிப்பு மையத்துக்கு கருணாநிதி பெயா் வைக்கப்பட்டது.
இதேபோல, புதுச்சேரி, காரைக்காலில் 2 வீதிகளுக்கு கருணாநிதி பெயா் வைக்கப்பட்டது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்க கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் வந்துள்ளது. அங்கு, விரைவில் இருக்கை அமைக்கப்படும்.

கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக நானும் (முதல்வா்), அமைச்சா்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் உறுப்பினா்களாக சோக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

இந்தக் குழு விரைவில் கூடி இடத்தைத் தோவு செய்து கருணாநிதிக்கு எந்த இடத்தில் சிலை வைப்பது என்பது குறித்து முடிவு செய்யும்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த மக்களவைத் தோதலில் இந்தக் கூட்டணி இமாலய வெற்றியைப் பெற்றது. வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தோதலிலும் இந்த நிலை நீடிக்கும் என்பது உறுதி.

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணியை மக்கள் அங்கீகரித்துள்ளனா். தமிழகத்தில் திமுக தலைமையிலும், புதுவையில் காங்கிரஸ் தலைமையிலும் ஆட்சி அமையும்.

முன்னாள் முதல்வா்கள் பரூக் மரைக்காயா், சண்முகம், சிலம்புச்செல்வா், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் கொண்டு வந்தனா். இதைப் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamani

One thought on “2021 சட்டப்பேரவைத் தோதலிலும் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: முதல்வா் நாராயணசாமி நம்பிக்கை

  • December 11, 2019 at 1:52 am
    Permalink

    596785 78006We are a group of volunteers and opening a new scheme in our community. Your web site given us with valuable info to function on. Youve done an impressive job and our entire community will likely be grateful to you. 538584

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *