ஊரடங்கு; தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஊரடங்கு காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலாளர்களின் குறைகளுக்குத் தீர்வு காண மைய ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என மத்திய தொழிலாளர்கள் நலததுறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக, அறிவிக்கப்பட்டுள்ள, ஊரடங்கு காலத்தின்போது நாட்டிலுள்ள பணியாளர்கள், தொழிலாளர்களின் பிரச்னைகளை பரிசீலிப்பதற்காக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு அறைகளுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிலாளர் நலத் துறையிலிருந்து, ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த 20 கட்டுப்பாட்டு அறைகள் குறித்தும் தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் அறிந்திருக்கும் வகையில், அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும் என்று கங்வார், தாம் மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ள அவர், ‘தொழிலாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை’ என்று வலியுறுத்தியுள்ளார்

கரோனா தொற்று காரணமாக எழக்கூடிய தொழிலாளர் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சமீபத்தில், இந்திய அளவிலான 20 கட்டுப்பாட்டு அறைகள், தலைமை தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மைய பிரச்னைகள் ஊதியம், கூலி தொடர்பான பிரச்னைகள் பற்றி, இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் தீர்வு கண்டு வந்தன. ஆனால், கடந்த சில தினங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுவரை 2100 குறைகள் வந்துள்ளன. இவற்றுள் 1400 குறைகள் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சம்பந்தப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: The Hindu Kamadenu

(Visited 7 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis