இங்கிலாந்து-இலங்கை மோதல் எப்போது

கொழும்பு: கொரோனா காரணமாக தடைபட்ட இங்கிலாந்து, இலங்கை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கும் எனத் தெரிகிறது.

இலங்கை வந்த, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது. இதற்குத் தயாராகும் வகையில் பயிற்சி போட்டியிலும் பங்கேற்றது.

ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க, பயிற்சி போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. 10 நாட்கள் இலங்கையில் இருந்த இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பியது.

தவிர உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகின.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் 2021, ஜன., மாதத்திற்கு மாற்றியுள்ளோம். இதற்கான தேதிகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேபோல ஒத்தி வைக்கப்பட்ட தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், வரும் இந்தியா (ஜூன்-ஜூலை), வங்கதேச (ஜூலை-ஆக.,) தொடர்களையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 15 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis