எச்சில், வியர்வைக்கு ‘நோ’ * ஆஸி., முடிவு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளின் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது. தவிர பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்கவும், இதற்குப் பதில் வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே ஆஸ்திரேலிய விளையாட்டு அமைப்பு சார்பில், மத்திய, மாகாண அரசுகள், விளையாட்டு அமைப்புகள், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து மூன்று பிரிவுகளாக புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதன் விபரம்

* ‘லெவல் ஏ’: இப்போதைய நிலையில் அனைத்து வித பயிற்சிக்கும் தடை, தனிப்பட்ட முறையில் ஈடுபடலாம்.

* ‘லெவல் பி’: வரும் வாரங்களில் குறைந்த பவுலர்களுடன், பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சிக்கு அனுமதி. ஒருவருக்கு ஒருவர் தொடும் அளவிலான பயிற்சிகளுக்கு தடை, பயிற்சின் போது பந்தை பளபளப்பாக்க எச்சில்/வியர்வை பயன்படுத்த தடை

* ‘லெவல் சி’: சில மாதங்களுக்குப் பின், முழு அளவிலான பயிற்சி, போட்டிகள் நடத்தலாம். பந்தை பளபளப்பாக்க எச்சில்/வியர்வை பயன்படுத்த தடை தொடரும்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 8 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis