எப்போதும் கோல் அடிக்க ஆசை * சுனில் செத்ரியிடம் எதிர்பார்ப்பு

புதுடில்லி: ”களமிறங்கும் அனைத்து போட்டியிலும் கோல் அடிக்க வேண்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்,” என சுனில் செத்ரி தெரிவித்தார்.

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி 35. தற்போது விளையாடும் வீரர்களில் தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்களில் போர்ச்சுகலின் ரொனால்டோவுக்கு (164ல் 99 கோல்) அடுத்து சுனில் செத்ரி (115 போட்டி, 72 கோல்) உள்ளார்.

இவர் கூறியது: எனது அம்மா சுஷிலா, நேபாள கால்பந்து அணியிலும், அப்பா கே.பி.செத்ரி இந்திய ராணுவ அணிக்காகவும் விளையாடியுள்ளனர். இதனால் நானும் எளிதாக கால்பந்தில் நுழைந்து விட்டேன். 17 வயதில் தொழில் ரீதியிலான கால்பந்தில் முதன் முதலாக கோல்கட்டாவின் மோகன் பகான் அணிக்காக விளையாடினேன்.

போட்டியில் 20 அல்லது 30 நிமிடம் மட்டும் விளையாடுவேன். எல்லோரும் என்னை அடுத்த ‘பாய்ச்சங் பூட்டியா’ என்றனர். இதிலிருந்து மீண்டு வருவது கடும் சவாலாக இருந்தது. ஆனால் கோல்கட்டா எனக்கு கால்பந்தை வேகமாக கற்றுக் கொடுத்தது.

சற்று சொதப்பினாலும் ரசிகர்கள் எதிராக திரும்பி விடுவர். அந்த நேரங்களில் அழுதுள்ளேன். கால்பந்தில் இருந்து விலகலாம் என்று கூட யோசித்தேன். இருப்பினும் எனது குடும்பத்தினர் ஆதரவு அதிகம் இருந்தது.

ஒப்பிட முடியாது

மற்றபடி பாய்ச்சங் பூட்டியாவுடன் ஒப்பிடவே முடியாது. உண்மையில் எனது துவக்க காலத்தில் அவர் அணியில் இருந்தது எனது அதிர்ஷ்டம் தான். தவிர ரெனெடி சிங், தீபக் மண்டல், மகேஷ் காவ்லி என பல சீனியர் வீரர்கள், எனக்கு அதிக பாதுகாப்பாக இருந்தனர்.

அதேநேரம் எனது சுதந்திரத்தில் எப்போதும் தலையிட்டது இல்லை. எல்லோரும் நான் கோல் அடிக்க வேண்டும் என்று தான் விரும்புவர். இன்று 72 கோல் அடித்துள்ளேன் என்றால் அதற்கு இவர்களும் காரணம் தான்.

இவ்வாறு சுனில் செத்ரி கூறினார்.

அம்மா தான் போட்டி

சுனில் செத்ரி கூறுகையில்,”துவக்கத்தில் பல விளையாட்டுகள் விளையாடுவேன். உண்மையில் இன்று சிறப்பாக செயல்பட இது தான் கைகொடுக்கிறது. மற்றபடி எனது மிகப்பெரிய போட்டியாளர் என்றால் அது அம்மா தான். செஸ், கேரம், வாலிபால், பாட்மின்டன், கால்பந்து, மல்யுத்தம் என எந்த போட்டியாக இருந்தாலும் இவரை வீழ்த்த முயற்சிப்பேன்,” என்றார்.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 4 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis