காவல் துறையில் தீவிரமடைந்த தொற்று சென்னையில் ஒரே நாளில் 5 போலீசாருக்கு கொரோனா: பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 2 காவலர்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி முதல் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரம் வெளியே வராதபடி போலீசார் இரவும் பகலும் பாராமல் சாலைகளில் நின்று பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மதுரவாயலில் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், புதுப்பேட்டை ஆயுதப்படை 30 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதேபோல், டிஜிபி அலுவலகத்தில் உள்ள மாநில உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய 2 காவலர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல் ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர் என நேற்று மட்டும் 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 பேருக்கு தொற்று தொற்று உறுதியாகி பன் நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் எஸ்பிளனேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர், வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர், ஐபிஎஸ் போக்குவரத்து உதவி ஆய்வாளர், தண்டையார் பேட்டை காவல் நிலைய காவலர், திருவல்லிக்கேணி போக்குவரத்து முதல் நிலை காவலர், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலர் உட்பட 5 பேர், எழும்பூர் ரயில் காவல், டிஜிபி அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்த அமைச்சுப்பணியாளர் உட்பட மொத்தம் நேற்று வரை 21 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பணியாற்றிவர்கள் என அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். காவல் துறையில் அதிதீவிரமாக கொரோனா தொற்று பரவி வருவதால் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பங்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinakaran

(Visited 8 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis