துப்பாக்கி 2: ஜெகதீஷ் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்

நடிகர் விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள். இந்த கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசை.விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் வெளியீடு கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிபார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது.இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி படத்தின் கொலேஜ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள், துப்பாக்கி 2 படம் உறுதியானதை தான் சந்தோஷ் சிவன் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார் என கருதுகின்றனர்.உடனடியாக #Thuppakki2 என ஹேஷ்டேக் போட்டு டுவிட்டரில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர். ரசிகர்கள் சிலர் துப்பாக்கி 2 படத்திற்கு மோஷன் போஸ்டர் எல்லாம் உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TheLogicalNews

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TheLogicalNews. Publisher: Dinamalar

(Visited 12 times, 1 visits today)
The Logical News

FREE
VIEW
canlı bahis